March 12, 2009

நீல வெயில்...


கிளையில் ஊர்ந்த கூட்டுப்புழு
சட்டென பறந்தது தும்பியாகி
மௌனமாகி விட்டன
விட்டுச்சென்ற அதன் வண்ணங்களும்
கிளை பூ வாசனையும்...

உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...

சுவர் மோதி மீளும்
உன் சொல் கரையும் வெளியில்
உடைமாற்ற காத்திருக்கிறதென்
கவிதை...

வேரறுந்து மேலெழும்
தாவரத்தையொத்து
நானொரு முத்தமாகிறேன்,
கொத்த காத்திருக்கும்
உன் கூரலகு இடைவெளியில்
மீன்களாகிறது என் கண்கள்...

இப்படியாக,
நேற்றிரவு
ஒரு நீல வெயில்
எனை நனைத்து சென்றது...

8 comments:

KARTHIK said...

// உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா.//

ரசிக்கும் படியான வரிகள்

என்ன கவிஞரே ரொம்ப நாளா ஆளக்கானோம்.

அகநாழிகை said...

//நதியில் மிதக்கும் நிலா
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...//
அருமையான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்.
வில் ஸ்மித் நடித்த “The Pursuit of Happiness” படம் பற்றிய எனது கருத்தினை பதிவு செய்துள்ளேன். படித்து தங்கள் கருத்தினை கூறுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.
www.aganaazhigai.blogspot.com

- பொன். வாசுதேவன்

kishore said...

நல்லா இருக்குங்க

ரௌத்ரன் said...

நன்றி கார்த்திக்..

நன்றி அகநாழிகை..

வருகைக்கு நன்றி கிஷோர்...

butterfly Surya said...

நன்றி ரெளத்ரன்.

எனது வலையின் வருகைக்கும் ஆலோசனைக்கும்.

முயற்ச்சிக்கிறேன்.

ஈ மெயில்: butterflysurya@gmail.com

anujanya said...

அட்டகாசம் ரௌத்ரன். மொழி மிக அழகு.

அனுஜன்யா

நளன் said...

:))

Anonymous said...

நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...

wow...wat imagination...Pon..vijai