
டிரிக்கரிலிருந்து விடுபடும் ரவை
உரசிச்செல்லும் வண்ணத்துபூச்சிகளின்
சிறகுகளில் வழிகின்றன
பெருங்காட்டின் பச்சையம்
அடர் மழைக்கு கூடொடுங்கிய
ஆதி பறவையின் கண்களில்
பொதிந்திருக்கிறது நீலம்
முனை முறிந்த பேனா
வீழும் செந்நதியில்
நீராடி கரையேறுகிறான் ரிஷி
கிளையொன்றில் தொங்குது
வன தேவதையின் சடலம்...
4 comments:
எனக்கு புரிந்த வகையில்
ஆதி பறவைகள் காணாமல் போய் வெகு நாட்களாகிவிட்டது...
என்னவென்று மறுமொழியிடுவது என விழிக்கிறேன் நண்பா...வேறென்ன சொல்ல...?
அருமை ரெளத்ரன். வார்த்தைகள் எப்படி அமைகிறது உங்களுக்கு..
சூப்பர்.
புதிய பதிவு(Women on Top) உங்களின் வருகைக்காக காத்திருக்கிறது.
நன்றி.
நன்றி சூர்யா..
Post a Comment